ஆஸ்கர் விழாவில் நடிகை தீபிகா படுகோனே... அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
#Cinema
#TamilCinema
#Actress
#Award
Mani
2 years ago
.jpg)
சர்வதேச அளவில் சினிமா துறையினருக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க ஆஸ்கர் விருது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழா தொடர்பான அறிவிப்புகளை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆஸ்கர் விருதுகளை வழங்கப்போகும் பிரபலங்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 16 பேர் கொண்ட பட்டியலில் இந்திய நடிகை தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



