திடீரென வட்டி வீதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி

#Central Bank #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews #IMF
Prathees
2 years ago
திடீரென வட்டி வீதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை இறுதி செய்ய உதவுவதற்காக, இலங்கையின் மத்திய வங்கி நேற்று வெள்ளிக்கிழமை எதிர்பாராத நடவடிக்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

வங்கி அதன் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் முறையே 15.50 மற்றும் 16.50வீதமாக உயர்த்தப்பட்டன

இந்தநிலையில் நாடு, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் நிதியுதவியை விரைவில் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிதி நெருக்கடியால் நசுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் 50வீதமாக உயர்ந்த பணவீக்கத்தின் மத்தியில் பொருளாதார வளர்ச்சி 9.2 வீதமாக சுருங்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!