மனைவி,மகனை கொலை செய்து 700 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்கர்

#America #Murder #Arrest #Prison #Court Order #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
மனைவி,மகனை கொலை செய்து 700 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்கர்

அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்ததுடன், நிதிக் குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

தென் கரோலினாவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் முர்டாக் (52). இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மனைவி மேகி மற்றும் மகன் பால் ஆகியோரை கொன்றதால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரது தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மேகி, பால் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது கொலைகளை தாம் செய்யவில்லை என கடுமையாக மறுத்தார்.எனினும், ஒரு டஜன் வாடிக்கையாளர்களிடம் இருந்தும், அவரது சட்ட நிறுவனத்திடம் இருந்தும் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

இரட்டைக் கொலைக்கான தண்டனை பின்னர் வழங்கப்படும் என நீதிபதி கூறிய நிலையில், அலெக்ஸ் 30 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் சுமார் 99 நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!