2022 ஆண்டில் மட்டுமே பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு கோடிக்கணக்கான நிதி அமெரிக்கா வழங்கி உள்ளது-நிக்கி ஹாலே

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என சமீபத்தில், முன்னாள் மாகாண கவர்னர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான நிக்கி ஹாலே (வயது 51) விருப்பம் வெளியிட்டார்.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) முன்பே விருப்பம் தெரிவித்து விட்டார். இந்த நிலையில் அதே கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே டிரம்புக்கு போட்டியாக தானும், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்குவேன் என கூறியது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹாலே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஒரு பலவீனம் வாய்ந்த அமெரிக்கா மோசம் வாய்ந்த நாடுகளுக்கு பணம் வழங்கி கொண்டிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டுமே பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு கோடிக்கணக்கான நிதியை உதவியாக வழங்கி உள்ளது என நிக்கி ஹாலே தெரிவித்து உள்ளார்.



