உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் - ரஷ்யா

#Ukraine #Russia #War #Attack #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் - ரஷ்யா

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், ரஷியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போர் விவகாரம் குறித்து உக்ரைனுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகளைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜப்போரிஜியா ஆகிய பிராந்தியங்களைக் கைப்பற்றிய ரஷியா, மேற்கண்ட 4 மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷியாவுடன் இணைத்துக் கொண்டது. 

ஆனால் இது முறையற்றது என மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!