உயிரிழந்த வேட்பாளரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட ஜே.வி.பி.யின் தலைவர்

#Colombo #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
2 years ago
உயிரிழந்த வேட்பாளரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட ஜே.வி.பி.யின் தலைவர்

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த அக்கட்சியின் வேட்பாளரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் நிவித்திகலையில் இடம்பெற்றது.

இறுதிக் கிரியைகளில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் அரசியல் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக நிவித்திகலவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் படையின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த வேட்பாளர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!