வடக்கின் நுழைவாயில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 3,4,5 திகதிகளில் - பாடசாலை சீருடையுடன் வருவோருக்கு கட்டணம் இல்லை

யாழில் வடக்கின் நுழைவாயில் எனும் தெனிப்பொருளில் 13ஆவது தடவையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ். ரில்க்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சர்வதேச கண்காட்சி ஆனது 13 ஆவது தடவையாகவும் கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தவுள்ளோம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்ப நீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றும் தற்காக சுமார் 15ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள் சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.
பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.



