முன்னாள் பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

#Colombo #Court Order #Maithripala Sirisena #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
முன்னாள் பொலிஸ் மா அதிபர்  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த மனுவை பேண வேண்டிய அவசியமில்லை எனவும், அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அப்போது அந்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், தம்மை சட்டவிரோதமான முறையில் கட்டாய விடுமுறையில் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அந்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் கோரி திரு பூஜித் ஜயசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!