ஆஸ்திரேலிய ரயில் நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கத்திக்குத்து தாக்குதல்..!

#world_news #Australia #Tamil Nadu
Mani
2 years ago
ஆஸ்திரேலிய ரயில் நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கத்திக்குத்து தாக்குதல்..!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அப்ரன் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. நேற்று இந்த ரெயில் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளியை கத்தியால் தாக்கினார்.

இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அந்த நபர் போலீசாரை தாக்க முயன்றார், ஆனால் அவர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

]கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபர் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது (வயது 32) என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அகமது என்பவர் கத்தியால் குத்தித் தாக்கியதற்கு காரணம் என்ன? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!