இன்றைய வேத வசனம் 01.03.2023: நான் குருடனுக்குக் கண்ணும் சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியை உண்டு. அந்த ஆசிரியர் பள்ளியில் மத்தியான வேளயில் தன் வகுப்பில் பயிலும் மாணவர்கள் சாப்பிடாமல் சாப்பிடமாட்டார்.
அவர்கள் அனைவரும் சாப்பிடும்போது, தன் பிள்ளைகள் எல்லோருக்கும் உணவு இருக்கிறதா என்று அறிந்துகொண்ட பின் தான் உணவு அருந்துவார்.
இப்படி தினந்தோறும் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, கட்டாயமில்லை ஆனால் அவர் அந்த பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது.
நாம் நல்ல நிலையில் இருக்கும் போது ஏதோ ஒரு உதவி செய்தோம் என்றல்ல, மற்றவர் படும் துன்பத்தை நம் துன்பமாக அனுபவித்து அதற்க்கான தீர்வை நாம் செய்ய வேண்டும்.
அதற்க்கு நமக்கு அடிப்படையான தேவை மனதுருக்கம் இல்லாமல் நாம் யோபுவைப் போன்று பார்வையற்றோருக்கு பார்வையாகவும், சப்பாணிக்கு காலாகவும் இருக்க முடியாது.
#யோபு 29:15
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.



