தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

#Bandula Gunawardana #Minister #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அரச ஊழியர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!