அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
#TamilNadu Police
#Tamil Nadu
Mani
2 years ago
மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத், பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்த ரவுடி வினோத்திடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை தாக்க முயன்றார். இதனால், தற்காப்புக்காக போலீசார் வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி வினோத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.