நிபந்தனையற்ற மன்னிப்பு; செபால் அமரசிங்கவின் வழக்கினை நிறுத்திய நீதிமன்றம்

#SriLanka #Court Order #Buddha #buddhist_ pali university #Police #Arrest #Lanka4
Mayoorikka
2 years ago
நிபந்தனையற்ற மன்னிப்பு; செபால் அமரசிங்கவின் வழக்கினை நிறுத்திய நீதிமன்றம்

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர்  செபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரது வழக்கு நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்துள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்   செப்பல் அமரசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் மகாநாயக்க தேரர்களிடமும் பௌத்த சமூகத்திடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ், அவ்வாறு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், வழக்கை முடித்துக் கொள்ளத் தயார் எனத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முறைப்பாட்டாளர் பௌத்த தகவல் மையத்தின் வணக்கத்திற்குரிய அகுருவெல்லே ஜினாநந்த தேரர் மற்றும் ஏனையவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

அதன்படி, வழக்கு விசாரணைகளை முடிக்கத் தயாராக இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  திலிப பீர்ஸ் நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி, வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானித்த நீதிமன்றம், சந்தேகநபரான சேபால் அமரசிங்கவை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட செபல் அமரசிங்க, நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!