அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை விமர்சித்த பலம்வாய்ந்த நபர் குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை

அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்து, அந்த முடிவுகளின் சரியான தன்மை குறித்து நேரடியான கருத்துக்களை வெளியிட்டு அண்மைய நாட்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ள அரசாங்க ஆணைக்குழுவின் பலமானவர் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளன.
பலம் வாய்ந்த இந்த நபர் ஆணைக்குழுவில் தனது பதவிக்கு மேலதிகமாக வர்த்தகராக கடமையாற்றி வரும் நிலையில், அவரது தொழில் நிறுவனங்களில் இருந்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையான முறையில் அறவிடப்பட்டுள்ளதா என தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் இந்த பலமானவர் நாடு திரும்பியவுடன் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, அவர் பதவி வகித்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, அவர் நாட்டுக்கு திரும்பியதும் வந்தவுடன், அந்த அலுவலகமும் அவர் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.



