ஏற்கனவே அச்சிடப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக 10 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள்

மறைகரங்களின் காரணமாக அச்சிடல் பணிகளில் முன்னேற்றம் மந்தமாக உள்ளதாக அரச அச்சகத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரச அச்சக ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசங்க சந்தருவன் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்னும் வாக்குச் சீட்டுகளை அச்சடித்து வருகின்றன.
அந்தவகையில், வரலாற்றில் வாக்குச் சீட்டு அச்சடிக்க இவ்வளவு நேரம் எடுத்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சிடுவதற்கு போதுமான பொருட்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் திணைக்களத்திடம் இருப்பதாக சந்தருவன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில், வாக்குச் சீட்டு அச்சிடுவதைத் தாமதப்படுத்தும் வகையில், சில சக்திவாய்ந்த சக்திகள் அச்சகத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது வெளிப்படையானது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



