பாய் வீடு கல்யாண நெய் சோறு; செய்யும் முறை

#Food #Preparation #Tamil Nadu
Mani
1 year ago
பாய் வீடு கல்யாண நெய் சோறு; செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

1 cup பாஸ்மதி அரிசி
2 பட்டை
1 லவங்கம்
2 கிராம்பு
2 ஏலக்காய்
1 பிரிஞ்சி இலை
1 வெங்காயம்
2 பச்சை மிளகாய்
5 gm புதினா
15 gm கொத்தமல்லி
1 தக்காளி
5 முந்திரிப் புதினா
15 cup தேங்காய் பால்
தண்ணீர் தேவையான அளவு
100 gm நெய்
தேவையான அளவு உப்பு 

செய்முறை:

பாய் வீட்டு நெய் சோறு செய்ய முதலில் கடாயில் நெய் சேர்த்து பட்டை லவங்கம் கிராம்பு பிரிஞ்சி இலை ஆகியவற்றை வறுக்க வேண்டும்.
பின் நீளவாக்கில் நறுக்கிய ஆகியவற்றை சேர்க்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் புதினா கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் மேலே சொன்னவாறு தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
பின் தண்ணீர் கொதித்த உடன் அரிசியை சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு சேர்க்க வேண்டும்.அதில் நெய்யில் வறுத்த முந்திரியை போட வேண்டும்.
பின் அரிசி பாதி கொதித்த உடன் அதை தட்டு வைத்து மூடி அதன் மேல் கனமான பொருளை வைக்க வேண்டும். நெய் சோறு தம்போடும் முறையாகும்.இப்பொழுது சிறிது நேரம் கழித்து சுவையான நெய் சோறு ரெடி.