இன்றைய வேத வசனம் 16.02.2023: தன் பாவங்களை மறக்கிறவன் வாழ்வடையமாட்டான்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 16.02.2023: தன் பாவங்களை மறக்கிறவன் வாழ்வடையமாட்டான்

பாலியல் பாவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும், அழிவையும் தரக்கூடியவை என்பதால் நீதிமொழிகள் புஸ்தகத்தில் வேறெந்த ஒரு பாவத்தையும் விட இவைகளின் துன்மார்க்கத்தைக் குறித்து எச்சரிக்கும் பொருட்டு அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் பாவம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கிற விசுவாசிகளின் சரீரத்தைத் தீட்டுப்படுத்துகிறது [#I_கொரிந்தியர் 6:19]
இந்த விதமான பாவங்களை குறித்து எச்சரிக்கைகள் #நீதிமொழிகள் 5:6:23-35 7:9:13-18 மற்றும் 22:14 ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

நிச்சயமான பாதுகாப்பு ஞானம் உன் இருயத்தில் பிரவேசித்து அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாய் இருக்கும் போது புத்தி உன்னை இச்சகம் பேசம் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரிக்கும் உன்னை தப்புவிக்கும் [நீதிமொழிகள் 2:10-11,17,19] போது தான் கிடைக்கும் என்று கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.

ஒரு பாவமான உறவுக்கு இடங்கொடுக்கும் போது அது கண நேர சரீரதிருப்தியைக் தரலாம், ஆனால், ஸ்திரீயுடன் விபச்சாரம் பண்னுகிறவன் மதிக்கெட்டவன் அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான் [#நீதிமொழிகள் 6:32] என்று வேதம் கூறுகிறது.

இவ்விதப் பாவங்களால் ஏற்படும் கேடான விளைவுகள் தவிர்க்க முடியாதவை என்று கர்த்தர் எச்சரிக்கிறார்.
உடனே அவன் அவள் பின்னே சென்றான் ஒரு மாடு அடிக்கபடும் படி செல்வது போலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப்போவது போலும் [#நீதிமொழிகள் 7:22].

வயது வந்தவர்களிடையே அவர்களுடைய விருப்பத்தோடு நடைபெறும் விபச்சாரங்களும், வேசித்தனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதாம் என்று சிலர் அவர்களாகவே தவறாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் கர்த்தர், "வஞ்சிக்கப்படாதிருங்கள் அசுசி மார்க்கத்தாரும், விக்கரகாராதணைக்காரரும், விபச்சாரக்காரரும், சுய புணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று சொல்கிறார். [#I_கொரிந்தியர் 6:9-10] 
சாத்தான் நம்மை பாவஞ் செய்யத் தூண்டக்கூடும்! ஆனால் நாம் அந்த தூண்டுதலிலேயே நிலைத்திருந்தால் பாவம் ஆரம்பமாகிறது.

ஆகையினால், "எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருந்து நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும் [#II_கொரிந்தியர் 10:5].
இந்த பாலியல் பாவத்திற்க்குள்ளானவர் யாராயிருந்தாலும், உண்மையில் இந்தத் துன்மார்க்கத்திற்காக கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

எனென்றால், "தன் பாவங்களை மறக்கிறவன் வாழ்வடையமாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" #நீதிமொழிகள் 28:13
நம் பாவங்களுக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து .

ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்துகறார்.

அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார் இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனி பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லை [#எபிரெயர் 10:12,14,17-18] ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!