நீங்கள் வாழ்நாளில் சிரமப்பட்டு சேர்த்த சொத்தை வராகி அம்மன் கொண்டு காப்பது எப்படி?

#ஆன்மீகம் #உழை #பணம் #கடவுள் #லங்கா4 #spiritual #money #work #information #Lanka4
நீங்கள் வாழ்நாளில்  சிரமப்பட்டு சேர்த்த சொத்தை வராகி அம்மன் கொண்டு காப்பது எப்படி?

வாழ்க்கையில் அனைவருமே உழைக்கும் போது பல ஆண்டு கஷ்டப்படு வியர்வை சிந்தி உழைத்து சேர்த்த பணம் அல்லது சொந்தத் தொழில் புரிந்து சேர்த்த பணம் எவ்வளவு பெறுமதியானது என்பது அவரவருக்குத்தான் தெரியும்.

இவ்வாறு சிரமப்பட்டு சேர்த்த சொததை பொறாமை கொண்டு பார்க்கும் சில நபர்களின் கண்திருஷ்டியால் அவை வீணாக்கப்பட்டு விடலாம் அல்லது மேலும் சேர விடாமல் தடுக்கலாம்.

ஆகையால் இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ள வராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்

ஐந்து திரி அகல் விளக்கு நாம் வீட்டில் இருந்த படியே வராகி அம்மனை வழிபடுவதற்கு வராகி அம்மனின் திருவுருவச் சிலையோ அல்லது திருவுருவப்படமோ வீட்டில் இல்லை என்றாலும் அல்லது 5 திரி போட் அகல் விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைக்கலாம்.

எதற்காக ஐந்து திரி போடுகிறோம் என்றால் வராகி அம்மனுக்கு பஞ்சமுகி தேவி, பஞ்சமி தேவி என பஞ்சபூதங்களுடன் ஒப்பிட்டு சில பெயர்களும் உண்டு என்பதால் அகல் விளக்கு ஐந்து திரி போடுவது கூடுதல் சிறப்பை தரும். 

வராகி அம்மன் பூஜை வராகி அம்மனுக்கு பூஜை செய்ய வழக்கம்போல் தினசரி காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்து பூஜை அறையில் அகல் விளக்கை ஏற்றி விளக்கின் முன் அகல் தாம்பூல தட்டை வைத்து அதில் வெற்றிலை வைத்து அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைத்து பின் பயபக்தியோடு முழு மனதாக வராகி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ‘ஓம் மோஹி மோஹின்யை நமஹ’ இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து, வராகி அம்மனே மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

மேலும் வாராகி அம்மனுக்கு நிவேதியமாக வைப்பதற்கு கல்கண்டு அல்லது ஏதேனும் ஒரு பழ வகைகளை எடுத்து விளக்கின் முன் வைத்துக் கொள்ளுங்கள். பிரசாதம் இப்படி வராகி அம்மனை மனதார வேண்டி மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வராகி அம்மனே மனம் குளிர்ந்து நாம் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்.

எலுமிச்சம் பூஜை நிறைவு செய்து நாம் வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன் சாறை பிழிந்து வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக குடிக்க கொடுக்கலாம் அல்லது வீட்டில் சமையல்களில் எலுமிச்சை பழம் சேர்த்து சாப்பிடலாம்.

அதுவும் இல்லை என்றால் அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டு பாதியாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வீட்டின் நிலை வாசலில் வைக்கலாம். பின்பு எலுமிச்சம் பழத்தை வாசலில் நடமாட்டம் இல்லாத இடங்களில் போட்டு விடுங்கள்.

இப்படி வராகி அம்மனுக்கு தினமும் பூஜை செய்து அல்லது செவ்வாய் வெள்ளிகளில் செய்து சேர்த்த சொத்தை நீங்களும் பாதுகாத்து மேலும் பெருக்கி வளமுடன் நலமுடனும் வாழ வாராகி அம்மன் காத்து நிற்பாள்.

.