நிலக்கரியை கொள்வனவு செய்ய பணம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை

#sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
நிலக்கரியை கொள்வனவு செய்ய பணம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குமாறு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இதன்படிஇ 12.32 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் என் சுமனசேகர தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

இலங்கையில் அந்தப் பணத்தின் பெறுமதி 4.56  பில்லியன்  ரூபாவாகும்.

இதேவேளைஇ 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று அனுமதி கோரியிருந்தது. 

எவ்வாறாயினும் பெப்ரவரி 16ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இடமளிக்க மாட்டோம் என கடந்த 28ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!