பொய் குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் திடீர் கைது

#Pakistan #Minister #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பொய் குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் திடீர் கைது

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் கட்சி தலைவரான இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். 

இந்த நிலையில் இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம் தீட்டுவதாக ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மீது அப்பாரா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஷேக் ரஷீத் அகமதை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். 

இதுதொடர்பாக ஷேக் ரஷீத் அகமதுவின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "நள்ளிரவு 12.30 மணி அளவில் ஷேக் ரஷீத் அகமது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

சுமார் 300 போலீசார் ஷேக் ரஷீத் அகமது வீட்டுக்குள் நுழைந்தனர். ஜன்னல், பொருட்களை நொறுக்கினர். ஷேக் ரஷீத்தை தாக்கி கைது செய்து அழைத்து சென்றார்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!