ஜோ பைடனின் கடற்கரை வீட்டில் சோதனை - முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லை
#America
#Biden
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் டேலாவேரில் உள்ள ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ரகசிய ஆவணங்கள் இருக்கிறதா என்று தேடினர்.
இந்த சோதனையில் கடற்கரை இல்லத்தில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



