உக்ரைன் மீது பாரிய தாக்குதலொன்றுக்கு தயாராகிவரும் ரஷ்யா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
#world_news
#Russia
#Ukraine
#War
Mayoorikka
2 years ago

உக்ரைன் மீது பாரிய தாக்குதல் ஒன்று நடாத்துவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 24ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகொவ்(Oleksii Reznikov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பை ஆரம்பித்த தினத்தைக் குறிக்கும் வகையில் புதிதாக எதையாவது செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஆயிரக்கணக்கான படையினரை ரஷ்யா குவித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய இராணுவத்தினரால் கொண்டாடப்படும் தந்தை நாடு தினம் எதிர்வரும் 23ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனையும் அடையாளப்படுத்தும் வகையில் புதிய தாக்குதல் நடத்தப்படலாம் என அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகொவ் தெரிவித்தார்.



