யாழ்ப்பாணம்-ஏறாவூரில் வீட்டில் குழந்தை பிரசவித்த 15 வயதான பாடசாலை மாணவி - சந்தேக நபர் கைது

#SriLanka #School #Student #Sexual Abuse #Arrest #Death #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
யாழ்ப்பாணம்-ஏறாவூரில் வீட்டில் குழந்தை பிரசவித்த 15 வயதான பாடசாலை மாணவி - சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி தனது வீட்டில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, அவரால் பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்து காணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பிரசவத்தின் பின்னர் குழந்தை கொல்லப்பட்டதா அல்லது ஏதேனும் காரணத்தினால் குழந்தை பிரசவத்தின்போது இறந்ததா என்பதை அறிய குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவை பேணியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!