வாஷிங்டன் மார்க்கட்டில் பொதுமக்கள் மீது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் மரணம்

#America #GunShoot #Death #world_news #Tamilnews
Prasu
2 years ago
வாஷிங்டன் மார்க்கட்டில் பொதுமக்கள் மீது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் மரணம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சர்க்கிங்கே மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். 

இதில் கடையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த வாலிபர் சுட்டதில் மேலும் ஒருவர் பலியானார். 

அதன்பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பி சென்றார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அந்த வாலிபர் ஒரு கிடங்குக்கு பின்னால் பதுங்கி இருப்பது தெரியவந்தது. 

அங்கு போலீசார் சென்று வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீசார் கூறும்போது, "துப்பாக்கி சூடு நடத்திய நபர் 21 வயதான ஜரிட் ஹாடாக் என்பது தெரியவந்தது. அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதற்கு முன்பு தனது தாயிடம் போனில் பேசி உள்ளார். அவருக்கும் சுட்டுகொல்லப்பட்டவர்களுக்கும் எந்த மோதலும் இல்லை'" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!