இன்றைய வேத வசனம் 20.01.2023: என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன்
மேய்ப்பவர்கள், எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள். நீ என்ன வேலை செய்கிறாய் என்று யாராவது கேட்டால், "நான் ஆடு மேய்க்கிறேன்" என்று சொல்ல யாரும் பிரியப்படமாட்டோம். அது இழிவான தொழில் என்று அநேகர் கருதுகிறார்கள்.
ஆனால் கர்த்தர் தன்னை ' மேய்ப்பன் ' என்று அழைக்க வெட்கப்படவில்லை (யோவான் 10 : 11 ). காணாமற்போன ஆட்டைப் போல இருந்த நம்மைத் தேடி பூமிக்கு வந்தார்.
ஆடுகளுக்கு இருக்கும் எதிரிகள் கொஞ்சமல்ல, ஆடு ஒரு குட்டி போடுவதற்குள் அதன் பரம விரோதியான ஓநாய் ஐந்து ஆறு குட்டிகளைப் போட்டு விடுகிறது.
கரடி, புலி, சிங்கம் போன்ற துஷ்டமிருகங்கள் எத்தனையோ மடங்கு பலுகிப் பெருகிவிடுகிறது. ஆடு இனம், இன்னும் பூமியிலிருப்பது, அதிசயத்திலும் அதிசயமே.
நம் மேய்ப்பன் வல்லமையுள்ளவர். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைத் தந்து ஆடுகளை மீட்டுக் கொண்டார் (யோவான் 10:11).
அவர் பேதுருவிடம் கேட்ட கடைசி வேண்டுகோள், " என் ஆடு மேய்ப்பாயாக' என்பதுதான். அவரது வார்த்தைகள் பேதுருவை உடைத்தது.
பிரதான மேய்ப்பருக்கு ஊழியஞ்செய்யும் உடன் மேய்ப்பராக மாறினார்.
தேவஜனமே, கர்த்தருடைய ஆடுகளை மேய்ப்பீர்களாக!
யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.