36 பிரித்தானியர்களை நிறுத்தப்பட்டியலில் சேர்த்த ரஷ்யா!
#world_news
#UnitedKingdom
#Britain
#government
#Russia
Nila
2 years ago
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் 36 பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் மற்றும் பாதுகாப்பை சேவை உறுப்பினர்களை அதன் நிறுத்தப்பட்டியலில் சேர்த்துள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிவிவகார அமைச்சு பட்டியலிடவில்லை என்றபோதிலும், அவர்களில் அமைச்சர்களும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தால் பின்பற்றப்படும் ரஷ்ய எதிர்புக்கொள்கைக்கு பதிலடியாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா தொடர்ந்தும் மோதல் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. வாஷிங்டனுடன் இணைந்து ரஷ்யா குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.