உக்ரைனில் போரிட மறுப்பு தெரிவித்த ரஷ்ய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

#Russia #Ukraine #War #Troops #Arrest
Prasu
2 years ago
உக்ரைனில் போரிட மறுப்பு தெரிவித்த ரஷ்ய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

உக்ரைனில் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு ரஷிய நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மார்செல் காந்தரோவ் (வயது 24) என்ற அந்த வீரர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், மே 2022-ல் பணி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்ன சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். உக்ரைன் மீது நடத்தி வரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக சுமார் 3 லட்சம் வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டு, அதன்படி புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த அறிவிப்பையடுத்து ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர். பலர் ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!