கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதிக்காக 8 மாதங்களில் 557 பில்லியன் செலவு
Prathees
2 years ago

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நுகர்வுப் பொருட்களின் இறக்குமதிக்காக பாரிய செலவினங்களை நாடு சுமத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் இலங்கைக்கான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 557 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட கால நுகர்வுப் பொருட்கள் நாட்டில் இருந்த போதும், அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பெருமளவு பணம் செலவிடப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.
இந்நிலைமையினால் இலங்கையில் ஒரு குடும்பத்திற்கு 423 ரூபா வீதம் ஒரே நாளில் நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



