இரட்டை குடியுரிமை எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு கடிதம்
Prathees
2 years ago

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பஃபேரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் சபாநாயகர் அவதானித்து பாராளுமன்றம் மீது பொதுமக்களின் அதிருப்தியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பஃபேரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றது.



