மின்சார சபையின் மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது..!

Prathees
2 years ago
 மின்சார சபையின் மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது..!

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான குழுவின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி குழுவொன்று  நியமிக்கப்பட்டது.குழுவில் 8 பேர் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது கூடி அறிக்கை தயாரித்து, செப்டம்பர் 8ம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளையும் பெற்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!