இன்றைய வேத வசனம் 24.10.2022: நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயும்இ ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 24.10.2022: நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயும்இ ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்

தேசத்தின் தேவையை அறிந்த பாரமுள்ள ஜெபவீரர்கள், ஒன்றாய்க் கூடுகிறார்கள். ஜெபத்தின் தேவையை வலுயுறுத்திப் பேசுகிறார்கள். ஒருமனப்பாட்டின் அவசியத்தை விளக்குகிறார்கள்.

முடிவில், பொக்கிஷதாரராக யாரை ஏற்படுத்துவது என்பதில் காரசாரமாய் விவாதம் செய்து, கடைசியில் பிரிவினையோடு, தங்கள் தரிசனத்தைக் கைவிட்டு விட்டவர்களாய் திரும்புகிறார்கள்.

வேதம் சொல்லுகிறது. "செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும், கனத்திலும் பேர் பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்" (பிரசங்கி 10:1).

1) சொற்ப மதியீனத்திற்கு விலகுங்கள்:-
ஜாதிப் பிரிவினை இன்று ஆவிக் குரிய உலகில் மாபெரும் மதியீனமாய் இருக்கிறது. பண ஆசை, பதவி வெறிக்கு விலகுங்கள். அது உங்களை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்.

2) தைலக்குப்பியை மூடிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்:- 
திறந்திருக்கும் தைலக்குப்பியை, தேடி சாத்தான் வருகிறான். அதை இடைவிடாத ஜெபத்தால் மூடிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

3) தைலத்தின் விலை மதிப்பை சிந்தித்துப் பாருங்கள்:- 
உங்கள் ஆத்துமா விலையேறப் பெற்றது. சொற்ப மதியீனமாய், அற்ப கூழுக்காக, அபூர்வமான சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போடாதீர்கள்.

4) சுற்றிப் பறந்துவரும் ஈக்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்:-
உங்களை முகஸ்துதி பேசுவார்கள். பதவிகளைத் தருவார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது? ஆராய்ந்து பாருங்கள். கிறிஸ்துவை மட்டுமே பிரியப்படுத்த தீர்மானம் செய்யுங்கள்.

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக் குள்ளேயும். நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயும், ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்" (கொரிந்தியர் 2:15,16).