இன்றைய வேத வசனம் 23.10.2022: உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 23.10.2022:   உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி

பவுல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். பேதுரு இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்தவன். அவருடன் இரவும் பகலும் சுற்றியவர். மிகப்பெரிய வல்லமையானா அப்போஸ்தலர் பவுலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சீனியர் ஊழியக்காரர் தான்.

ஆனால், பேதுருவின் தவறை சுட்டிகாட்ட பவுல் தவறவில்லை. (கலா 2:11). திருத்த முற்படுகிறார். பேதுருவும் உனக்கெல்லாம் என்ன தெரியும்?? எனக்கு புத்தி சொல்ல வந்துவிட்டாயா?? எனக்கு அதிகாரியாய் உன்னை யார் ஏற்படுத்தினது? என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கவில்லை.

தன் செயலை நியாயப்படுத்தவும் இல்லை எதிர்த்து சண்டையிடவும் இல்லை. மாறாக உண்மையை ஏற்றுக்கொண்டார்.

தன்னைத் திருத்தின பவுலை நேசித்து நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல் என்று தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். 

என்னே பேதுருவின் தாழ்மை என்று பாருங்கள் நாமும் தாழ்மையுள்ளவர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்!!!

(நீதிமொழிகள் 19:20) உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.