இன்றைய வேத வசனம் 20.10.2022: மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 20.10.2022: மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்

அந்த மனுஷன்... மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.  2 கொரிந்தியர் 12:3-4

தாமஸ் அக்வேனாஸ் (1225-1274), திருச்சபையின் அதிகம் போற்றப்படுகிற விசுவாசத்தின் பாதுகாவலர். ஆயினும், அவரது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன், அவரது மிகப்பெரிய படைப்பான “சுமா தியாலோஜிகா” (Summa Theological) என்னும் எழுத்துப்பணியை முடிக்கவிடாமல் ஏதோ தடை ஏற்பட்டது.

உடைக்கப்பட்ட சரீரத்துடன் இரத்தஞ்சிந்தும் இரட்சகரைத் தரிசனத்தில் பார்த்ததாக அக்வேனாஸ் சொல்லுகிறார். அவர், “இனிமேல் என்னால் எதுவும் எழுதமுடியாது. என்னுடைய எழுத்துக்களை பதராய் பார்க்குமளவிற்கு சில காரியங்களை நான் பார்த்தேன்” என்று சொல்லுகிறார்.

அக்வேனாஸ் பார்த்ததைப் போன்று பவுலும் தரிசனம் பார்த்திருக்கிறார். 2 கொரிந்தியரில் அவர் தம்முடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்:

“அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்” (12:3-4).

பவுலும் அக்வேனாஸும் வார்த்தையினாலும் ஆதாரங்களினாலும் விவரிக்கமுடியாத சமுத்திரம் போன்ற தெய்வீக நன்மைகளை நமது சிந்தனைக்கு விட்டுச் சென்றனர்.

அக்வேனாஸ் கண்டவைகளின் தாக்கங்கள் தம்முடைய பணியை செய்யக்கூடாதபடி அவரை பாதித்தது, தேவன் தம்முடைய குமாரனை நமக்காக சிலுவையிலறையப்பட அனுப்பிய செயலுக்கு உவகையாக உள்ளது. ஆனால் அதற்கு முரணாக, பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதினார்.

ஆனால் தம்முடைய சுயபெலத்தால் சிலவற்றை விவரிக்க முடியாது என்பதை அறிந்தே எழுதினார்.

அவருடைய போராட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான நேரங்களில் அவருடைய வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தேவனுடைய கிருபையையும் நன்மையையும் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய ஊழியத்தை நேர்த்தியாய் செய்தார் (2 கொரிந்தியர் 11:16-33; 12:8-9).