உயர் அழுத்த மின் கம்பத்தில் கார் மோதியதில் நான்கு பேர் காயம் - பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
Prathees
2 years ago

பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பிகள் கொண்ட கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பண்டாரகம, வல்மில்ல பிரதேசத்தில் மின்சாரம் பல மணிநேரம் துண்டிக்கப்பட்டது.
பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்து பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



