இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

Kanimoli
3 years ago
இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான 'ஏ9' மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.

அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் 'பிரபாகரன்' என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார்.

இதேவேளை, அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடித்திருந்தார். இதற்காக பல விமர்சன ரீதியான சிக்கல்களையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ் பல சகோதர மொழி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு இலங்கை கலைத்துறையினர் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4