உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியானது 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
இப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள நாடுகளின் பட்டியல் மற்றும் இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான நேர அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
எதிர்வரும் 10ஆம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் ஸிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி போட்டியில் இணையவுள்ள இலங்கை அணி, அதன் பின்னர் 13ஆம் திகதி மெல்போர்னில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இதனையடுத்து, ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் முதலில் இலங்கை மற்றும் நமீபியா மோதவுள்ளன.
இந்நிலையில், கடந்த மாதங்களில் இடம்பெற்ற ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை சாம்பியன் வென்றது குறிப்பிடத்தக்கது.



