திங்கட்கிழமை புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் - ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்

Kanimoli
2 years ago
 திங்கட்கிழமை புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் - ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்

நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த ஜுலை மாதம் 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சர்களாக 18 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எவ்வாறாயினும் நாளை மீண்டும் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அமைச்சர்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இம்மாத இறுதிக்குள் இன்னும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!