உயர் பாதுகாப்பு வலயங்களை சவாலுக்கு உட்படுத்தி மனுத்தாக்கல்
Mayoorikka
2 years ago

கொழும்பிலுள்ள பல முக்கிய பகுதிகள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’எனக் குறிப்பிட்டு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.



