தந்தையை வெட்டி கொலை செய்து தீ வைத்த மகன்! தாய் வைத்தியசாலையில் அனுமதி

Prasu
2 years ago
தந்தையை வெட்டி கொலை செய்து தீ வைத்த மகன்! தாய் வைத்தியசாலையில் அனுமதி

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

அத்துடன், தாய் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தந்தையின் உடலுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கர வண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை அண்மையில் தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

28 வயதுடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலபே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!