இன்று 16 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள் இதோ..
Prathees
2 years ago

கடுவெல உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று (21) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஹங்வெல்ல, கஹாஹேன, ஜல்தர, ரணால, கடுவெல, மாப்பிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு ஏற்படும்.
லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த் தாங்கியை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.



