ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் குழந்தைகளிடையே தொற்றாத நோய்கள் பரவும் அபாயம்

ஸ்மார்ட் போன் பாவனைக்கு அடிமையான சிறுவர்களிடையே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பேச்சுத்திறன் குறைதல், உடல் பருமன், சுமுகத்தன்மை இழப்பு போன்ற நோய்கள் தோன்றியுள்ளதாக சிறுவர் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், தேவையான காரணங்களை தவிர்த்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை கொடுக்க வேண்டாம் என பெரியவர்களை கேட்டுக்கொள்கிறார்.
“ஸ்மார்ட் போனை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தாமல் வீடியோ கேம்கள் மற்றும் பிற சமூக விரோத செயல்களுக்கு குழந்தைகள் அடிமையாவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளின் பேச்சு வளர்ச்சி, சகஜத்தன்மை, கண் வறட்சி, பார்வை குறைபாடு, தொலைநோக்கு பார்வை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், தலைவலி போன்றவையும் ஓரளவுக்கு வளர்ச்சியைக் காட்டுகின்றன என கலாநிதி தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.



