கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழப்பு
#Canada
#GunShoot
#Police
#Death
Prasu
2 years ago

கனடாவின் டொரண்டோ மேற்கு பகுதியில் உள்ள மிசிசாகாலில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒரு வாகனத்தை திருடி கொண்டு தப்பி சென்றார்.
இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



