மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தாக்கியதில் 81 வயது பெண் ஒருவர் பலி
#SriLanka
#Death
Prasu
2 years ago

மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தாக்கியதில் 81 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவன் பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதை அடுத்து பாட்டி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



