அதிக விலைக்கு முட்டை விற்பனை: 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
Mayoorikka
2 years ago

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
50 ரூபாவிற்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை தேடி சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.



