எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய நடைமுறை - எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
Reha
2 years ago

எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய நடைமுறைகளை முன்னெடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கத்தை குறுஞ்செய்தி (SMS) மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான கியூ ஆர் குறியீட்டு முறைமையும் தயாராக உள்ளதெனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்பிறப்பாக்கிகள், புல்வெட்டும் இயந்திரங்கள் உட்பட ஏனைய இயந்திரங்களுக்கான QR குறியீட்டு முறைமைக்கான பதிவு முறை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



