மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை - பிரசன்ன ரணதுங்க
Kanimoli
2 years ago

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி காட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் விரும்புகிறதா என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார் .



