48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த தாழமுக்கம்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Mayoorikka
2 years ago

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக புயல் இந்தியாவைக் கடக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அந்த அமைப்பு எதிர்வரும் 9ஆம் திகதி உருவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.



