ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெனீவாவை சென்றடைந்தது இலங்கை பிரதிநிதிகள் குழு
Mayoorikka
2 years ago

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இலங்கைப் பிரதிநிதிகள் குழு நேற்றிரவு ஜெனீவாவை சென்றடைந்துள்ளது.
நீதி அமைச்சர் பேராசிரியர் விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட நால்வர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.



