அமெரிக்காவின் உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல்

Kanimoli
2 years ago
அமெரிக்காவின் உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த உயர்நிலைப் பாடசாலை அருகே அமைந்துள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திலிருந்தே நேற்று மதியம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு காரில் வந்த மர்ம மனிதர் ஒருவர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த நபரைத் தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!