40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு

Prabha Praneetha
3 years ago
40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு

40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று  இரவு நாட்டை வந்தடையவுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அத்துடன், 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய எரிபொருள் பாஸ் QR திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி வரை கொழும்பின் பல இடங்களிலும் QR குறியீடு பரிசோதனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4